Home இலங்கைஅமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது

அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது என அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறான எவ்வித தாக்குதல் முனைப்புக்கள் பற்றிய தகவல்களும் கிடையாது எனவும்  அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் கருத்து வெளியிடப் போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More