குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாருக்கான தற்போதைய தூதுவர் ஏ.எஸ்.பி லியனகே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.
தாம் இலங்கையில் சேவையாற்ற விரும்புவதாகவும் வேறு நாடுகளில் சேவையாற்றுவதில் ஆர்வம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் கட்சியின் தலைவரும் பிரபல்மான வர்த்தகருமான லியனகே கடந்த மார்ச் மாதம் கட்டாருக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்டாருக்கான தூதுவர் பதவியை வகிக்க விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண ஆளுனர் பதவிக்கு வெற்றிடம் ஏற்படும் போது அந்தப் பதவியில் நியமிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தார் எனவும் அந்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஜனாதிபதியை குறைகூறவில்லை எனவும், தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் இதனால் பதவியை விட்டு விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவினை வழங்கப் போவதாகவும், ஜனாதிபதியுடனோ அல்லது அரசாங்கத்துடனோ எவ்வித தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏ.எஸ்.பி லியனகே கட்டார் தூதுவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்
Jul 4, 2017 @ 13:52
கட்டாருக்கான தற்போதைய இலங்கைத் தூதுவர் ஏ.எஸ்.பி லியனகே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். நாளைய தினம் லியனகே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண ஆளுனர் பதவி முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆளுனர் பதவி வழங்கப்பட்டமையினால், ஏ.எஸ்.பி லியனகே அதிருப்தி அடைந்துள்ளார்.இந்த அதிருப்தி காரணமாகவே லியனகே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாளைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி தாம் பதவி விலக உள்ளதாக அறிவிக்க உள்ளார்.