Home இலங்கைஎனக்காக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாம் – கார்லோ பொன்சேகா

எனக்காக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாம் – கார்லோ பொன்சேகா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமக்காக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாம் என மருத்துவ பேரவையின் தலைவர் கார்லோ பொன்சேகா, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் கோரியுள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் இன்றைய தினம் பேராசிரியர் கார்லோ பொன்சேகா சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது மருத்துவ பேரவையின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு விரும்பவில்லை எனவும் தமக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் கார்லோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் கார்லோ பொன்சேகாவின் ஐந்தரை ஆண்டு பதவிக் காலம் எதிர்வரும் 30ம் திகதியுடன் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மருத்துவ பேரவையின் தலைவர் பதவிக்காக பேராசிரியர் கொல்வின் குணரட்னவை நியமிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More