224
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை முகுருசா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முகுருசா, ஸ்லோவாகியாவின் மெக்டாலேனா ரிபாரிகோவாவை எதிர்கொண்டார். இதில் முகுருசா 6-1, 6-1 என எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததன் மூலம் இரண்டு முறை விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
Spread the love