குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முகநூல் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கப்படுவதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த தடவை ஆட்சி பொறுப்பில் இருந்து போது அவர் வெளிநட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த தருணத்தில் அப்போதைய ஜனாதிபதி பிரதமரின் சில அமைச்சுக்களை கையகப்படுத்தியிருந்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் தற்போது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்ததருணத்தில் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.