Home இலங்கைஜனாதிபதியின் உரை ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது – ராஜித

ஜனாதிபதியின் உரை ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது – ராஜித

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய உரை ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளிடம் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யப்படுவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பை வெளியிட்டதேயில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதி ஆற்றிய உரையை திருத்தி ஊடகங்கள் மீள் பிரசூரம் செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஜனாதிபதியின் உரை அடங்கிய வீடியோ காட்சியைப் பார்த்து தகவல் வெளியிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More