Home இலங்கைபிணை முறி மோசடிகளை மூடி மறைத்துக் கொள்ள ராஜபக்சக்கள் பயன்படுத்தப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஸ

பிணை முறி மோசடிகளை மூடி மறைத்துக் கொள்ள ராஜபக்சக்கள் பயன்படுத்தப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி மோசடிகளை மூடி மறைத்துக் கொள்ளவே அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸக்கள் மீது குற்றம் சுமத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரத்தில் தாயரான சிராந்தி ராஜபக்ஸ, சகோதரர்களான யோசித ராஜபக்ஸ மற்றும் ரோஹித ராஜபக்ஸ ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் ஆகியோர் இவ்வாறு விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மக்களின் அதிருப்தியை மூடி மறைக்கும் நோக்கில் ராஜபக்ஸக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More