Home இலங்கைஹாபிஸ் நசீர் அஹமட்டே அடுத்த முதலமைச்சராகவும் வர வேண்டும் – பாஷித் அலி

ஹாபிஸ் நசீர் அஹமட்டே அடுத்த முதலமைச்சராகவும் வர வேண்டும் – பாஷித் அலி

by admin

சி்றந்த ஆளுமையுடன் மக்களுக்கான பல்வேறு பட்ட அபிவிருத்தி செயற்பாடுகளை கொண்டு  சேர்க்கும் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சரான ஹாபிஸ் நசீர் அஹமட்டே அடுத்த முதலமைச்சராக வர வேண்டும் என்பதே  கிழக்கு மாகாண மக்களின் எதிர்ப்பார்ப்பாகும் என  ஏறாவூர் நகர சபை உறுப்பினர் பாஷித் அலி தெரிவித்துள்ளார்.

கிழக்கு முதலமைச்சரின் சேவைகளை பொறுத்துக் கொள்ள முடியாத பலர் அவர்  செய்கின்ற மக்கள் பணிகளை தூற்றுகின்ற அளவுக்கு காழ்ப்புணர்வுடன்  செயற்பட்டு வருவதை பார்க்கின்ற முடிகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஏறாவூரில் கிழக்கு முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில்  ஐந்து வீதிகளை கொங்கிரீட் இட்டு புரனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர் இதுவரை தாம் முன்னெடுத்த ஏமாற்று அரசியலை இனிமேலும் முன்னெடுக்க முடியாது என்ற காரணத்தால் பலர் முதலமைச்சரை தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டித் திரிகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்,

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More