Home விளையாட்டுநாளைய இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியினையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

நாளைய இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியினையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

by admin


கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நாளை   நடைபெறவுள்ள இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள்  கிரிக்கெட் போட்டிக்கு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை  தலைமையகம் தெரிவித்துள்ளது.

சுமார் ஆயிரம் காவல்துறையினர் ; இதன்போது பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மைதானத்தில் விசேட சிசிடிவி கமராக்களும்  பொருத்தப்பட்டுள்ளதாகவும்  காவல்துறை  தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது      ரசிகர்கள் மைதானத்துக்குள் பிளாஸ்ரிக் போத்தல்கள் என்பவற்றை வீசி கூச்சலிட்ட சம்பவத்தையடுத்தே  இவ்வாறு  பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More