தங்கள் குழந்தைகளை பராமரிப்பதற்காக, அனைத்து துறை சார்ந்த ஆண் ஊழியர்களுக்கும் 3 மாதம் வரை விடுமுறை வழங்க வேண்டும் என ஒரு தனி நபர் மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜீவ் சதவ் என்பவர் இது தொடர்பாக ஒரு மசோதாவை முன்மொழிந்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதா பற்றி பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குழந்தைகளின் ஆரம்ப கால பராமரிப்பு என்பது தாய், தந்தை ஆகிய இருவரின் கூட்டு பொறுப்பு என்பதனால் இது தொடர்பான மசோதாவை உருவாக்கி உள்ளதாக ராஜீவ் சதவ் தெரிவித்துள்ளார்.
அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களைப் போல ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறந்த நாளில் இருந்து குழந்தையை பராமரிக்க 3 மாதம் வரை விடுமுறை வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமானால் அமைப்புசாரா மற்றும் தனியார் உட்பட அனைத்து துறை சார்ந்த 32 கோடிக்கும் மேற்பட்ட ஆண் ஊழியர்கள் பயனடைவர் என அவர் தெரிவித்துள்ளர்h.