Home உலகம்அமெரிக்காவின் லாஸ் வேகஸ் தாக்குதலாளியின் வீட்டிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் தாக்குதலாளியின் வீட்டிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

by admin


அமெரிக்காவின்  லாஸ் வேகஸ் (Las Vegas )  நகரில் உள்ள விடுதியின் அருகே தாக்குதல் மேற்கொண்ட  கொலையாளியின் வீடு மற்றும் விடுதி  அறையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் குண்டுகளை வெடிக்க செய்யும் எலெக்ட்ரானிக் கருவிகள் பெருமளவு  கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ்வேகாஸ் நகரில் உள்ள பிரபல விடுதி ஒன்றில்  நடைபெற்ற    இசை நிகழ்ச்சியின்போது  குறித்த நபர் மேற்கொண்ட தாக்குதலில் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 பேர் வரை காயமடைந்திருந்தனர். துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்ட 69 வயதான  ஸ்டீபன் பட்டாக் என்பவர் குறித்த விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில்  கொலையாளி  தங்கியிருந்த  விடுதி  அறையில்  சோதனை மேற்கொண்ட காவல்துறையினர்   23 துப்பாக்கிகள் அதிகளவான    தோட்டாக்களை கைப்பற்றியதுடன் அவரது வீட்டில் இருந்தும் பல    துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் குண்டுகளை வெடிக்க செய்யும் எலெக்ட்ரானிக் கருவிகள் ஆகியவற்றினை கைப்பற்றியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More