குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா தனது அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் பகுதியில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தென்கொரியா இது இயற்கையான நில நடுக்கம் எனவும் ஆயுத பரிசோதனைகளால் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் நில நடுக்கம் ஏற்பட்டதை உறுதிசெய்துள்ளது. வடகொரியா தனது ஆறு அணுவாயுத பரிசோதனைகளையும் மேற்கொண்டிருந்த பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வடகொரியா வழமையாக அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும சந்தர்ப்பங்களில் நில நடுக்கம் ஏற்படுவது வழமை எனினும் இம்முறை இயற்கையாகவே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.