Home இந்தியாலக்ஷ்மி நாராயனண் கோவிலில் புகைப்படம் எடுக்க முயன்ற இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தவறி விழுந்து பலி:-

லக்ஷ்மி நாராயனண் கோவிலில் புகைப்படம் எடுக்க முயன்ற இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தவறி விழுந்து பலி:-

by editortamil

பிரித்தானியாவில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுப் பயணத்திற்கு சென்ற ரோஜர் என்ற சுற்றுலாப் பயணி மத்திய பிரதேசத்தில் கோவில் ஒன்றைப் படம் பிடிக்கும் போது கீழே தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியாவின் 56 வயதுடைய ரோஜர் ஸ்டோஸ்பரி மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சர்வதேச சுற்றுலாவை ஆரம்பித்தனர். இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் சில ஆசிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுலா தளங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.

பயணத்தின் இறுதி கட்டமாக இந்தியாவின் பழமையை தெரிந்து கொள்ளவும், இந்தியாவின் கட்டிடக் கலையை ரசிக்கவும் இந்தியாவிற்கு சென்றனர். முதல் கட்டமாக வட மாநிலங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஒரு வீடியோ எடுப்பதற்காக இந்திய மத்திய பிரதேசத்தின் ஆர்ச்சா என்ற நகரத்தில் இருக்கும் லக்ஷ்மி நாராயனண் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலின் கட்டிடங்களை தான் எடுக்கும் ஆவணம் படம் ஒன்றிற்காக வீடியோ எடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கோவிலின் மேல் பகுதியில் இருந்து, அந்த நகரம் எப்படி இருக்கிறது என்பதை வீடியோ எடுப்பதற்காக மேலே ஏறியுள்ளார். அப்படி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது கீழே பார்க்காமல் அப்படியே நடந்த அவர் கால் தவறி மாடியில் இருந்து 30 மீட்டர் கீழே விழுந்திருக்கிறார்.

இதில் காயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது மனைவி அந்த இடத்திலேயே மயங்கி இருக்கிறார். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More