குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது நிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல்நகர் பகுதியில் அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையால் அங்கு பதற்ற நிலை உருவாக்கி காணப்பட்டது.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்றுவந்த நிலையில், அந்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் ஒன்று பரவியதை அடுத்து கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, திடீர் என பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தமையால் அங்கு பதற்ற நிலைமை உருவாகிஇருந்தது
எனினும் கிளிநொச்சி மாவட்ட பிரயைகள் குழுவினர் கர்த்தாளுக்கு ஒத்துழைப்பு தருமாறு ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினரை கேட்டதற்கு அமைவாக குறித்த ஆடைத் தொழிற் சாலைகள் பன்னிரண்டு மணியளவில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை கிளிநொச்சி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் வீதியில் ரயர்கள் எறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபட்ட சில வாகனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் கலகம் அடக்கும் வகையில் பொலிஸார் தயார்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.