Home இலங்கையாழ் இந்திய துணை தூதுவரின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டியில் விபத்து:-

யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டியில் விபத்து:-

by editortamil

யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜனின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டியில் இன்று(22) காலை விபத்துகுள்ளாகி உள்ளது. இன்று காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜனின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டிப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான கார் ஒன்று முந்திச் செல்ல முயற்சித்த போது விபத்துக்குள்ளானதில் தனியாருக்கு சொந்தமான கார் தடம்புடண்டுள்ளது அத்துடன் யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் பயணித்த வாகனமும் சிறு சேதங்களுக்கு உள்ளானது இருப்பினும் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்ப்படவில்லை என பூநகரிப் பொலிசார் தெரிவிக்கின்றனர்

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரிப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More