Home இலங்கைதலைமைத்துவ பொறுப்பினை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் இல்லை

தலைமைத்துவ பொறுப்பினை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் இல்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தலைமைத்துவ பொறுப்பினை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் கிளர்ச்சி செய்ய பலர் முன்வருகின்ற போதிலும் அதற்கு தலைமை தாங்கக்கூடிய தகுதி உடையவர்கள் மிகவும் குறைவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒக்ரோபர் புரட்சிக்கு நூறு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ரஸ்யா இலங்கையுடன் நட்புறவாக செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More