Home இலங்கைஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது :

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றது. நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து தேர்தலை ஒத்தி வைப்பதற்கு முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். எந்தவொரு நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் விரிவான ஓர் கூட்டமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்ந்த வேறு எந்தவொரு கட்சியுடனும் இணைந்து போட்டியிடத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More