Home இலங்கைஇனவாத அடிப்படையில் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – பிரதமர்

இனவாத அடிப்படையில் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – பிரதமர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இனவாத அடிப்படையில் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இனவாதத்தை தூண்டும் கடும்போக்குவாதிகளை கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும்போக்குவாத அமைப்புக்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில இனவாதிகள் சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாக போலிப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் இனங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்துதல் என்பனவே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More