தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் நிரோசன் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியைக் கொண்டு மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைப்பதற்கு நான்கு மில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தொடர்பில் விசாரணை?
163
Spread the love