உலகம் புலம்பெயர்ந்தோர்

இந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் – மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை – விமான சேவைகள் பாதிப்பு:-

இந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் தீவிரமடைந்ததையடுத்து அப்பகுதி சுற்றிலும் உள்ள மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மலை உச்சியின் மேலிருந்து 3,400 மீற்றர் வரை கரும்புகை சூழ்ந்துள்ளதன் காரணமாக பாலியின் விமான நிலையம் மூடப்பட்டது. எரிமலை வெடிப்பின் சத்தம், மலை உச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் வரை கேட்கப்பட்டது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இரவில் தீக்கதிர்கள் அதிகளவில் காணப்பட்டன எனவும் இது ஒரு பெரிய வெடிப்புக்கான சாத்தியக்கூறை காட்டுகிறது எனவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முகப்புத்தக பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாம்பல் விழுந்துள்ள பகுதிகளில், அதிகாரிகள் முகமுடிகளை விநியோகம் செய்து வருகின்றனர்.  அகுங் எரிமைலையின் மேற்பரப்பின் அருகே உள்ள பாறைகள் உருகுவதாகவும், அடர் தீக்குழம்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மற்றும் எரிமலை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு, 1.4 லட்சம் மக்கள் வெளியேறியதை தொடர்ந்து, தற்காலிக தங்குமிடத்தில் இன்னும் 25 ஆயிரம் மக்கள் தங்கியிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.  963ஆம் ஆண்டு, கடைசியாக அகுங் மலை சீற்றமடைந்த போது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply