குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமைச்சரவை
தற்போதைக்கு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தேசிய ரீதியான ஒர் தேர்தல் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைச்சரவை எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் பதவியில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில் ஆட்சியை கவிழ்க்க முடியும் என சிலர் செய்து வரும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.