நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடைபெற்று வரும் ஏபிஎன் அம்ரோ டென்னிஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் தரவரிசை பட்டியலில் சுவிட்சலாந்தின் ரொஜர் பெடரர் முதலிடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் 36 வயதான பெடரர் அதிக வயதில் முதலிடத்தை பிடித்த வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார் . இதற்கு முன்னர் கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்க வீரர் ஆந்த்ரே அகாசி 33 வயதில் முதலிடத்தை பிடித்ததே சாதனையாக இருந்தது.
கால் இறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ரொபின் ஹசேவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நம்ப முடியாத வகையிலான சிறப்பான விஷயம் எனவும் . முதலிடத்துக்கு நான் திரும்புவேன் என நினைத்தது இல்லை எனவும் இந்த தருணம் தனது வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்தது எனவும் பெடரர் தெரிவித்துள்ளார்.