Home இலங்கை பல்லேகல, தெல்தெனிய பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்குச் சட்டம்..

பல்லேகல, தெல்தெனிய பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்குச் சட்டம்..

by admin


உடன் அமுலுக்கு வரும் வகையில் பல்லேகல மற்றும் தெல்தெனிய பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காவற்துறை ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கு மென காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (05) பிறப்பிக்கப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று (06) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 24 பேரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More