Home இலங்கைஅம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால்…

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால்…

by admin

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம், தமிழ் பிரதேசங்களில் முற்று முழுதாக வர்த்தக நிலையங்கள், அரச, தனியார் அலுவலகங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், எதுவித போக்குவரத்துகளும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அக்கரைப்பற்று பிரதேசத்தின் பிரதான பாதைகளில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் அங்கு காவல்துறை மற்றும் இராணுவம், விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மருதமுனை பிரதேசத்தில் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் மருதமுனையில் கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அங்கு இளைஞர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி ஒன்றையும் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More