மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரரான கிறிஸ் கெய்ல், 3 வருடங்களுக்குப் பின்னர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளுடனான போட்டியின் போது அவர் பெற்றுள்ள இந்த சதமானது அவரது 23-வது சதமாகும். இதன்மூலம் அதிக சதங்கள் பெற்றவர்களின் பட்டியலில் கெய்ல் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம் இதுவரை அந்த இடத்தில் 22 சதங்களுடன் இருந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் சவுரவ் கங்குலி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு நாள் போட்டியில் அதிக வயதில் சதத்தை பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் என்ற சிறப்பையும் 38 வயதான கெய்ல் பெற்றுள்ளார். இதன்மூலம் தேஸ்மான்ட் ஹெய்னின் பெருமையை கெய்ல் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது