குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிரேக்கத்தில் புகலிடக் கோரிக்கையாளர் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கிக்கு அருகாமையில் அமைந்துள்ள அகதோன்சீ என்னும் தீவுகளுக்கு அருகாமையின் கடற் பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த படகில் பயணித்த ஐந்து சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிரேக்கத்தில் புகலிடம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பயணித்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் சுமார் 4000 புகலிடக் கோரிக்கையாளர்கள் கிரேக்கத்தை சென்றடைந்துள்ளனர். ஆபத்தான படகுப் பயணங்களின் மூலம் பலர் கிரேக்கம் நோக்கிப் படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


A Hellenic Coast Guard vessel carrying the bodies of migrants that were drowned when the small boat they were travelling on capsized near the island of Agathonisi, approaches the port of Pythagoreio on the island of Samos, Greece, March 17, 2018. SamosTimes.gr via REUTERS

