Home இலங்கையாழ்.பல்கலை பேரவை உறுப்பினர்கள்

யாழ்.பல்கலை பேரவை உறுப்பினர்கள்

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14 உறுப்பினர்கள் அடங்கலாக 29 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்.
புதிய பேரவையின் முதலாவது கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வருமாறு :
1. திரு. மனோசேகரம்
2. ஏந்திரி. டி.கே.பி.யூ. குணதிலக
3. வைத்தியக்கலாநிதி பூ.லக்ஸ்மன்
4. பேராசிரியர் எஸ். சிவசேகரம்
5. பேராசிரியர் எச். எஸ். ஹிஸ்புல்லா
6. ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம்
7. பேராசிரியர் சிவயோகநாதன்
8. பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட
9. அதி. வண. ஜெரோ செல்வநாயகம்
10. திரு. எஸ். விஸ்னுகாந்தன்
11. வைத்தியக்கலாநிதி த. சத்தியமூர்த்தி
12. கலாநிதி ஆறு. திருமுருகன்
13. திரு. வி. கனகசபாபதி
14. திரு. நா. வேதநாயகன்
15. திரு. பி. ஈஸ்வரதாசன்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More