Home இலங்கைபிரதமர் தலைமையிலான தேனீர் விருந்தில் ஜனாதிபதி இல்லை?

பிரதமர் தலைமையிலான தேனீர் விருந்தில் ஜனாதிபதி இல்லை?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

நாடாளுமன்றத்தின் புதிய கூட்ட தொடரை ஜனாதிபதி நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் நடைபெற்ற தேனீர் விருந்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவில்லை.

பிரதமர் தலைமையில் இந்த தேனீர் விருந்து நடைபெற்றது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காணப்படும் அரசியல் ரீதியான பிரச்சினையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் அமைச்சரவை மாற்றத்தின் போது ஏற்பட்ட சம்பவங்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அரசியல் பிணக்கு ஏற்பட காரணம் என தெரியவருகிறது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி, உற்ற நண்பர்களின் பொருளாதாரத்தை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என கூறியிருந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More