Home இந்தியா முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம்

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம்

by admin

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம் வகுக்க மத்திய துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சர்வதேச ஆணையம் நியமிக்க வேண்டும் எனவும் அந்த அணை காலாவதியாகும் பட்சத்தில் எந்த மாநிலம் புதிய அணையை கட்டுவது மற்றும் , இழப்பீட்டை வழங்குவது என்பது குறித்து முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பேரிடர் மேலாண்மையை உறுதி செய்யும் வகையிலும் இயற்கை பேரிடரின்போது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் அதே அமைச்சகத்தின் துணைச்செயலாளரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு துணைக்குழு அமைக்கப்பட்டது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்த துணைக்குழுவின் கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையை இயற்கை பேரிடரின்போது பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் வகுக்க துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More