Home இந்தியாரோந்து சென்றபோது தவறி கடலில் விழுந்து உயிரிழந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது

ரோந்து சென்றபோது தவறி கடலில் விழுந்து உயிரிழந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது

by admin


ரோந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்து உயிரிழந்த சென்னையை சேர்ந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான கார்நிக்கோபர் கப்பல் 10க்கும் மேற்பட்ட வீரர்களுடன் சென்னை முதல் ராமேசுவரம் வரை உள்ள கடற்பகுதியில் ரோந்து சென்று வருவது வழக்கம்.

அந்தவகையில் கடந்த 6ம் திகதி இவ்வாறு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சென்னையை சேர்ந்த கடற்படை வீரரான 27 வயதான ஜாய் பிரசாத் என்பவர் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்துள்ளார். இதையடுத்து கடலோர காவல் படையினர், அப்பகுதி மீனவர்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டநிலையில் நேற்று இரவு தொண்டி கடற்கரையில் அவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More