பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. மேலும், விஜய் மல்லையாவிற்கு செந்தமான 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அமுலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கியபின் அதனைச் செலுத்தாமல் தப்பியோடிய விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். வரை இந்தியாவுக்கு மீள அழைத்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது