Home உலகம்பங்களாதேசில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது

பங்களாதேசில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது

by admin


பங்களாதேசில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது எனவும் கற்பனைக்கு எட்டாத அளவில் அங்கு அட்டூழியங்கள் நடந்துள்ளதை தான் பார்த்ததாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் ( Antonio Guterres  ) தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் பிரதி நிதிகள் குழு மியன்மாருக்குச் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ததுடன் பங்களாதேசில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் நிலைமைகள் குறித்தும் ஆய்வு செய்திருந்த நிலையில் அன்ரனியோ குட்டாரஸ் மேற்கண்டவாறு தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பங்களாதேசின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் முகாம்களில் பெண்கள் மீதான பலாத்கார சம்பவங்களும் நடந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தங்களுக்கான நீதியைக் கேட்கிறார்கள், பாதுகாப்பாக நாடு திரும்பவும் உதவி கோருகின்றனர். உலகில் அதிக அளவில் பாகுபாடு பார்க்கப்படும் இனங்களில் ஒன்றாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பங்களாதேசில்; தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களைத் திரும்ப தங்கள் நாட்டுக்கு அழைத்துக் கொள்ள மியன்மார் கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்புக்கொண்ட போதும் அந்த முயற்சி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

தங்களின் உரிமை, குடியுரிமை, பாதுகாப்பு ஆகியவை திரும்பக் கிடைப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே மீண்டும் தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடி யும் என ரோஹிங்கியா முஸ்லிம்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More