Home பிரதான செய்திகள்பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் முதலிடத்துக்கு முன்னேற்றம்

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் முதலிடத்துக்கு முன்னேற்றம்

by admin


பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். சமனிலையில் நிறைவடைந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியினைத் தொடர்ந்து ஜேம்ஸ் அண்டர்சன் 892 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ரபாடா 882 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 866 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், தென்னாபிரிக்காவின் வெர்னான் பிலாண்டர் 826 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.
துடுப்பாட்ட தரவரிசையில் சர்வதேச போட்டிகளில விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்திய அணித் தலைவர் விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.    இங்கிலாந்தின் ஜோ ரூட் 3ம் இடத்திலும் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், 4ம் இடத்திலும் உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More