குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இன்றைய தினம் காலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேச்சுவார்த்தை வெற்றியளித்த காரணத்தினால் போராட்டம் கைவிடப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களினால் நேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் பஸ் பணிப் பகிஸ்கரிப்பு போரட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.