Home இலங்கையாழ் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவாக்கள் தாண்டவம் – மூவர் காயம்…

யாழ் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவாக்கள் தாண்டவம் – மூவர் காயம்…

by admin

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வீடு மற்றும் பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் உள்ள 2 வீடுகளில் இன்று (06.09.18) அதிகாலை ஆவா குழுவினர் வாள்களுடன் சென்று வீட்டினை சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய பொருட்களையும் அடித்து நொறுக்கியதுடன், வீட்டில் இருந்தவர்களையும் வாளால் வெட்டியுள்ளனர்.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 70 வயதுடைய  வேலுப்பிள்ளை செல்வராசா, 25 வயதுடைய செல்வராசா சஜீபன்,  அயல் வீட்டுக்காரப் பெண்மணியான 61 வயதுடைய  பாலேந்திரன் சரோஜினிதேவி ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, நேற்று (05.09.18) குப்பிளான் பகுதியிலும், ஆவா குழுவினர் ஒரு வீட்டினை அடித்து  சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More