Home இலங்கைஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவடையவில்லை – மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவடையவில்லை – மஹிந்த

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைகளை சில சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக விட்டு கொடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்து விட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பதவிகள் சலுகைகளை அனுபவிக்கும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் நாம் கட்சி பிளவடையச் செய்வதாக எவ்வாறு குற்றம் சுமத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவும் தற்போது அந்தக் குற்றச்சாட்டு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் பழிவாங்கும் நோக்கில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More