Home இலங்கைதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணிமுதல்11 மணிவரை இப்போராட்டம் நடைபெற்றது

இதன் போது அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே விலக்கு , உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிரைப் பறிக்காதே, நல்லாட்சி அரசே ஏமாற்றாதே, வாய்ப்பு பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அதரசியல் கைதிகளையா, நல்லாட்சி அரசே வாக்குறுதி என்னாச்சு, நல்லாட்சி அரசே உயிர்களை கொல்லாதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களையும் எழுப்பியிருந்தனர்

இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர. அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்கின்ற நிலையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More