Home இலங்கைதிருநெல்வேலி மூன்று இளைஞர்கள் கைது

திருநெல்வேலி மூன்று இளைஞர்கள் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.திருநெல்வேலி பகுதியில் குழு மோதலில் ஈடுபட்ட குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலய சூழலில் நேற்று புதன்கிழமை இரவு மது போதையில் இரு இளைஞர்கள் குழு கைகளில் இரும்பு கம்பிகள் தடிகள் உடன் மோதலுக்கு தயாராக நிற்பதாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ யாழ்ப்பாண காவல்துறையினர் சென்றுள்ளனர்.

காவல்துறையினரைக் கண்டதும் இளைஞர்கள் குழு அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில் அவர்களில் மூவரை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளதுடன் அவர்களின் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் மீட்டுள்ளனர். அதனை அடுத்து கைது செய்யபப்ட்டவர்களையும் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் யாழ்ப்பாண காவல்துறையினரர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அதேவேளை குறித்த ஆலய சூழலில் இரவு வேளைகளில் கூடும் இளைஞர்கள் குழு ஆலய சூழில் மது உள்ளிட்ட போதை பொருட்களை பாவிப்பதாகவும் , அதனால் ஆலய புனித தன்மை கெடுவதாகவும் பயத்தின் காரணமாக அந்த இளைஞர்களுடன் தாம் கதைக்க செல்வதில்லை எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More