விளையாட்டு

டெஸ்ட் பந்துவீச்சு தர வரிசையில் அஸ்வின் – ஜடேஜா முதலிடம்


சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்  டெஸ்ட் பந்துவீச்சு தர வரிசையில் இந்திய வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் முதலிடத்தை பெற்றுள்ளனர்.  சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை டெஸ்ட் போட்டி அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் பந்துவீச்சு தர வரிசையில் அஸ்வின், ஜடேஜா இருவரும் 892 புள்ளிகள் பெற்று  முதலிடத்தில் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில்; முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஜடேஜா அஸ்வினுடன் இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.  இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேகப்பந்து வீரரான இலங்கையின் சுழற்பந்து வீரரான முத்தையா முரளீதரனும் இணைந்து  முதல் இடத்தை பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply