விளையாட்டு

20 செக்கன்களில் குத்துச் சண்டை போட்டியில் வெற்றியீட்டிய பிரித்தானியாவின் லாரன்ஸ்


20 செக்கன்களில் குத்துச் சண்டை போட்டியொன்றில் பிரித்தானிய வீரர் லாரன்ஸ் ஒகோலீ வெற்றியீட்டியுள்ளார்.  ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவம் செய்த ஒகோலீ, முதலாம் தொழில்முறை போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்துள்ளார்.

24 வயதான  cruiserweight  குத்துச் சண்டை வீரர் ஒகோலீ, எதிர்த்து போட்டியிட்ட Geoffrey Cave ஐ நொக்கவுட் முறையில் 20 செக்கன்களில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் போது ஒகேலீ இறுதி 16 பேர் வரையில் முன்னேறிய போதிலும், கியூப வீரர் ஒருவரிடம் தோல்வியடைந்திருந்தார். நான்கு ஆண்டுகளில் உலக குத்துச் சண்டை சாம்பியன் பட்டம் வெல்வதே தமது இலக்கு என ஒகோலீ தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply