விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ஜொஹானா கொன்டா வெற்றி


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித்  தொடரின் மகளிர் பிரிவில் ஜொஹானா கொன்டா வெற்றியீட்டியுள்ளார்.  பிரித்தானியாவின் ஜொஹானாவின் மிகப் பெரிய வெற்றியாக மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் வெற்றி கருதப்படுகின்றது. 25 வயதான ஜொஹானா, டென்மார்க்கின் Caroline Wozniacki ஐ வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார். ஜொஹானா 6-4 6-3 என்ற செற் கணக்கில் Caroline Wozniacki   ஐ வீழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் 940,000 பவுண்ட்கள் பரிசுப் பணமாக பெற்றுக் கொண்டுள்ளார். இந்த வெற்றியுடன் டென்னிஸ் தர வரிசையில் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ள ஜொஹானா, முதலாம் இடத்தைப் பிடிப்பதே தமது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap