விளையாட்டு

மரியா சரபோவா மீண்டும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளார்


ஊக்கமருந்து பயன்படுத்தியதால் போட்டித் தடையை எதிர்கொண்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, நாளை  புதன்கிழமை முதல் மீண்டும் டென்னிஸ் போட்டியில்  பங்கேற்கவுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 15 மாத கால போட்டித்தடை விதிக்கப்பட்டது.

அவர் மீதான தடை தற்போது நீங்கியுள்ள நிலையில், ஸ்டட்கார்ட் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்கு அவருக்கு அந்தத் தொடரின் அமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர். இதனையடுத்து நாளை இடம்பெறவுள்ள  ஸ்டட்கார்ட் தொடரின் முதல் சுற்றில் ரொபர்ட்டா வின்சியை மரியா  சரபோவா எதிர்கொள்ளவுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply