விளையாட்டு

சம்பியன் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியின் முதலாவது சுற்றில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி

ஐரோப்பிய கழக அணிகளுக்கு இடையிலான சம்பியன் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியின் முதலாவது சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில்  ரியல் மாட்ரிட் அணி வென்றுள்ளது. 32 அணிகள் பங்கேற்றுள்ள சம்பியன் லீக் கால்பந்து போட்டியில்; மொனாக்கோவின் மொனாக்கோ எப்.சி. , இத்தாலியின் யுவென்டஸ், ஸ்பெயினின்  ரியல் மாட்ரிட் மற்றும்  அட்லெடிகோ மாட்ரிட் ஆகிய 4 கழக அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.

ஒவ்வொரு அரைஇறுதியும் 2 ஆட்டங்களை கொண்ட நிலையில்  கோல் வித்தியாச அடிப்படையில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்தநிலையில் நேற்று நடைபெற்ற  முதலாவது அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில்  அட்லெடிகோ மாட்ரிட் அணியால் எந்தக்  கோல்களும் போடப்படாதநிலையில்  ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது.  இவ்விரு அணிகளுக்கிடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று மாட்ரிட் நகரில் எதிர்வரும் 10ம்திகதி நடைபெறவுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.