விளையாட்டு

இத்தாலிய சைக்கிளோட்ட வீராங்கனை கிளொடியா கிறெற்றி (Claudia Cretti )விபத்தில் படுகாயம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இத்தாலிய சைக்கிளோட்ட வீராங்கனை கிளொடியா கிறெற்றி  ( Claudia Cretti ) விபத்தில் படுகாயமடைந்துள்ளார். ஜியாரோ ரோசா(Giro Rosa)  சைக்கிளோட்டப் போட்டியில் பங்கேற்ற போது 21 வயதான கிளொடியா  விபத்துக்குள்ளாகினார்.

இந்தப் போட்டித் தொடரின் ஏழாம் சுற்றில் வைத்து கிளொடியா  விபத்துக்குள்ளாகியுள்ளார். தலை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த காரணத்தினால் கிளொடியா  தற்போது கோமாவில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும்,  அவருக்கு  உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap