விளையாட்டு

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெயின் ரூணி அறிவிப்பு

இங்கிலாந்தின் நட்சத்திர கால்பந்து வீரரான வெயின் ரூணி , சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்றையதினம் அறிவித்துள்ளார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழும் 31 வயதான ரூணி இங்கிலாந்து அணிக்காக அதிக கோலகளை; அடித்த வீரர் என்ற பெருமையைக் கொண்டவர் ஆவார்.

ஓய்வு முடிவை அறிவித்துள்ளதால்  இங்கிலாந்து அணி, அடுத்த மாதம் பங்குபற்ற உள்ள   உலகக்கோப்பை கால்பந்து  தகுதிச்சுற்று போட்டிகளில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட ஆலோசனைக்கு பின் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ரூணி  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை தனது குடும்பத்தினர், எவர்டன் அணி மேலாளர் மற்றும் நெருக்கமானவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை, 119 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரூணி  53 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply