விளையாட்டு

இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அன்டர்சன் 500 விக்கட்டுகளை கைப்பற்றி சாதனை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 500 விக்கட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேற்கி;ந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் வீரர் ஒருவர் 500 டெஸ்ட் விக்கட்டுகளை வீழ்த்தியமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரேக் வரத்வாயீயை க்ளீன் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து 500 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2003ம் ஆண்டில் லோர்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமான அன்டர்சன் தனது 123ம் டெஸ்ட் போட்டியில் அதே மைதானத்தில் 500 விக்கட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply