விளையாட்டு

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலக அணி வெற்றி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் உலக அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான டுவன்ரி20 போட்டித் தொடரின் இரண்டாம் போட்டியில் உலக அணி வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டியில் உலக அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கட்டுக்களினால் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் பாபர் அசாம் 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உலக அணி 19.5 ஓவர்களில் 7 3 விக்கட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ஹாசீம் அம்லா 72 ஓட்டங்களையும், திசர பெரேரா 47 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply