இலங்கை உலகம் பிரதான செய்திகள்

விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை சென்றிருந்த பிரித்தானிய ஊடகவியலாளர் முதலைக்கு பலி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை சென்றிருந்த  , பிரித்தானிய இளம் ஊடகவியலாளர் ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.  நேற்றையதினம் இலங்கையின் அருகம்பை பகுதியில்  இடம்பெற்ற இந்த சம்பவத்தில்  போல் மெக்ளீன் ( Paul McClean) என்ற 24 வயதான இளம் ஊடகவியலாளரே உயிரிழிந்துள்ளார்.

நண்பர்களுடன் அறுகம்பே பகுதிக்குச் சென்றிருந்த அவர், முதலைக் குன்று என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் கைகழுவச் சென்றுள்ள போது அவரை முதலை இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரித்தானிய இளம் ஊடகவியலாளரின் உடலைத் தேடும் நடவடிக்கைகளில் இலங்கை காவல்துறையினரும்  இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ள  நிலையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம், இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளது என  காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers