குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டித் தொடரின் மூன்றாம் சுற்றுக்கு நட்சத்திர டென்னிஸ் வீரர்களான ரொஜர் பெடரர் மற்றும் ரபால் நடால் ஆகியோர் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். உலக டென்னிஸ் தர வரிசையில் முதனிலை வகிக்கும் நடால், அமெரிக்காவின் ஜரெட் டொனால்ட்சன் ((Jared Donaldson ) ஐ வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
6-2 6-1 என்ற நேர் செற்களில் நடால் இலகு வெற்றியீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரொஜர் பெடரர், ஆர்ஜ்டீனாவின் டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேன் ( Diego Schwartzman) ஐ வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தப் போட்டியில்; டியாகோவை, சுவிட்சர்லாந்தின் பெடரர் என்ற 7-6 (7-4) 6-4 செற் கணக்கில் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார்.
Add Comment