விளையாட்டு

ரொனால்டோ புதிய சாதனை


சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஒரு சீசனின் அனைத்து நிலைப் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது கட்ட   பிரிவுப் போட்டிகள்  கடந்த 6ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நேற்று நடைபெற்ற எச் பிரிவு லீக் போட்டியில், போரசியா டார்ட்மண்ட் அணியுடன் ரியல் மாட்ரிட் அணி போட்டியிட்டது.  இப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வென்றது.

இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலமாக, ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ  ஒரு சீசனின் அனைத்து நிலைப்போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என் புதிய சாதனை  படைத்துள்ளார்.

சம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ரொனால்டோ, 114 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். பார்சிலோனா நட்சத்திரமான லியோனல் மெஸ்சி, 97 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply